தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திண்டுக்கல்லில் ஜெ., பிறந்த நாள் விழா

 திண்டுக்கல்லில் ஜெ., பிறந்த நாள் விழா

 திண்டுக்கல்லில் ஜெ., பிறந்த நாள் விழா


ADDED : பிப் 25, 2026 07:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 07:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78 வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பஸ் ஸ்டாண்ட் எம்.ஜி.ஆர்., சிலை அருகே ஜெயலலிதா திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செய்யப்பட்டது. அமைப்பு செயலாளர் மருதராஜ் தலைமை வகித்தார். மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் ராஜ்மோகன், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் பாரதிமுருகன் முன்னிலை வகித்தார்.

அ.தி.மு.க., பகுதி செயலாளர்கள் சுப்பிரமணி, மோகன், ராஜன், முரளி, சேசு, முகமதுஇக்பால், மேற்கு ஒன்றியச் செயலாளர் ராஜசேகரன், பாரதிமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் ஆவின் தலைவர் திவான்பாட்சா, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல நிர்வாகிகள் வீரமார்பன், முன்னாள் எம்.எல்.ஏ., பிரேம்குமார், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் ரவிக்குமார், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் ராஜசேகரன், இணைச் செயலாளர் லோகநாதன் பங்கேற்றனர்.

- வேடசந்துார் : ஆத்து மேட்டில் அ.தி.மு.க., இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் பரமசிவம் தலைமையில் கட்சியினர் ஜெ .,உருவ படத்திற்கு மாலை அணிவித்தனர். மேற்கு ஒன்றிய செயலாளர் ஜான்போஸ், நகர செயலாளர்பாபு சேட், நிர்வாகிகள் அம்மையப்பன், ஆறுமுகம், சந்திரசேகர், தண்டபாணி, வேளாங்கண்ணி, ராமலிங்கம், காளியப்பன், நடராஜன், சாந்தி, புஷ்பா, நாட்ராயன், பாலமுருகன் பங்கேற்றனர்.

பழநி: பஸ் ஸ்டாண்ட் மயில் ரவுண்டான அருகே ஜெயலலிதா குடும்ப படத்திற்கு அ,தி.முக.,வினர் மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.

நகரச் செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். மாநில எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைச் செயலாளர் ரவிமனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ., வேணுகோபாலு, முன்னாள் எம்.பி., குமாரசாமி, ஒன்றிய செயலாளர்கள் மாரியப்பன், முத்துசாமி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அன்வர்தீன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா முஹமது பங்கேற்றனர்.

நத்தம் : நத்தம் ,கோபால்பட்டி பஸ் ஸ்டாண்டில் அ.தி.மு.க., சார்பாக கொண்டாடப்பட்ட விழாவில் ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கண்ணன் தலைமையில் ஜெ., உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர் சுப்ரமணி, ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, சுப்பிரமணி, சின்னு, மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை செல்வராஜ், ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் எம்.ராஜேந்திரன், இணைச் செயலாளர்கள் விஜயன், சேகர்,நகர அவைத்தலைவர் சேக்ஒலி, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அசாருதீன் கலந்து கொண்டனர்.

கொடைக்கானல் : நகர செயலர் ஸ்ரீதர் தலைமையில் துணை செயலர் ஜாபர்சாதிக், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் பிச்சை, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலர் பாலசுப்ரமணி, மாவட்ட பிரதிநிதி பாரூக் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

ஒட்டன்சத்திரம்: ரயில்வே ஸ்டேஷன் முன்பிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பஸ் ஸ்டாண்ட் சென்றனர். அங்கு ஜெ., உருவப்படத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் என்.பி.நடராஜ் தலைமையில் கட்சி பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பல்வேறு ஆதரவற்ற முதியோர், மாணவர்கள் காப்பகத்திற்கு காலை உணவு,இனிப்புகள் வழங்கினர்.

பஸ் ஸ்டாண்ட் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது. நகர செயலாளர் கே.விஜயரமனேஷ்வரன் முன்னிலை வகித்தார்.

எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளர் பி.பாலசுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் எஸ்.ஏ.பழனிவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.சண்முகவேல், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.பாலுச்சாமி, தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் எஸ்.நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் உதயம் ராமசாமி, மாவட்ட மீனவரணி செயலாளர் கே.பி.வி.மனோகரன், நகர பொருளாளர் கிட்டான், கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பொன்னுசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் இளமதி பழனிச்சாமி, ஐ.டி.,விங்க் மாவட்ட துணைத் தலைவர் சீராபாலா, நகர செயலாளர் காமாட்சி ராஜா கலந்து கொண்டனர்

கன்னிவாடி : ரெட்டியார்சத்திரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் தருமத்துப்பட்டியில் ஜெ., பிறந்த தின விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமை வகித்தார். செவனக்கரையான்பட்டி, டி.புதுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் இனிப்பு , நல உதவிகள், தருமத்துப்பட்டியில் வேட்டி, சேலை வழங்கப்பட்டது. ஊராட்சி முன்னாள் தலைவர் மருதமுத்து, கூட்டுறவு சங்க தலைவர் தண்டபாணி, எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட நிர்வாகி மகேந்திரன் பங்கேற்றனர். தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை அன்னதானம் நடந்தது.

ரெட்டியார்சத்திரம்: கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி, ஜெ., பேரவை செயலாளர் மயில்வாகனன், ஊராட்சி முன்னாள் தலைவர்கள் ஜி.நடுப்பட்டி ரவிச்சந்திரன், காமாட்சிபுரம் கணேஷ் பிரபு பங்கேற்றனர்.

சித்தையன்கோட்டை: சித்தையன்கோட்டை, பாளையங்கோட்டை, சீவல்சரகு உள்ளிட்ட இடங்களில் மாவட்ட மாணவரணி செயலாளர் கோபி தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் முகமது அலி, ஒன்றிய மாணவரணி செயலாளர் முகமது ஹாஜியார், நிர்வாகிகள் அக்பர் அலி, பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் ரமேஷ்குமார், முன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகி பாண்டி, முத்து பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us