UPDATED : ஜூலை 15, 2026 03:34 PM
ADDED : ஜூலை 15, 2026 02:10 PM
அ நிறம் | அளவு
தொப்பம்பட்டி:பழநி தொப்பம்பட்டி அருகே தும்பலபட்டி சங்கர் பொன்னர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜர் 124வது பிறந்த நாள் விழா நடந்தது. எட்டாம் வகுப்பு மாணவர்கள் பாசிப்பயறு கொண்டு 20 அடி உயரம் 8 அடி அகலத்தில் காமராஜரின் ஓவியத்தை வரைந்தனர்.
மாணவர்களை அறக்கட்டளை தலைவர் சுதாகர் சாமி, செயலாளர் ராமசாமி, பொருளாளர் சுகுமாரன், தலைமை ஆசிரியர் ரட்சுமராஜ், ஓவியாசிரியர் விஜி பாராட்டினர்.
