/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் கந்த சஷ்டி அக்.22 ல் துவக்கம்
/
பழநியில் கந்த சஷ்டி அக்.22 ல் துவக்கம்
ADDED : அக் 15, 2025 01:27 AM
பழநி:பழநி முருகன் கோயில் கந்த சஷ்டி விழா அக். 22ல் துவங்குகிறது. அக். 27 ல் சூரசம்ஹாரம், 28ல் திருக்கல்யாணம் நடக்கிறது.
இக்கோயிலில் அக். 22ல் உச்சிக்கால பூஜைக்கு பின் சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்குகிறது. அன்று முதல் சாயரட்சை பூஜைக்கு பின் தங்கச்சப்பர புறப்பாடு நடக்கும்.
ஆறாம் நாளான அக்.27 மாலை சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சி, பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி, முருகன் கோயிலில் இருந்து சின்ன குமாரசுவாமி அடிவாரம் எழுந்தருள சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் வாழைத்தண்டை படையல் ஆக்கி வழிபடுவர்.
மாலையில் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் ஆகியோரை சின்ன குமாரசுவாமி வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.
இரவு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா உடன் அக்.28ல் முருகன் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி, தெய்வானை, சண்முகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
அன்று மாலை பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்க சுவாமி தங்க குதிரையில் உலா நடக்கிறது.