/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கனிகா குரூப்ஸ், பசிபிக் லேண்ட் இல்ல திருமண விழா
/
கனிகா குரூப்ஸ், பசிபிக் லேண்ட் இல்ல திருமண விழா
ADDED : பிப் 18, 2025 05:32 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் கனிகா குரூப்ஸ் ஆப் கம்பெனிஸ் தலைமை நிர்வாகஇயக்குனர்கள் பாலச்சந்திரன்-பிரேமா திலகா தம்பதியரின் மகன் பால பிரிய தர்ஷன், மதுரை பசிபிக் லேண்ட் புரமோட்டர்ஸ் இயக்குனர்கள் பொ. சந்திரன் - மீனா தம்பதியரின் மகள் ரக்சனா திருமணம் திண்டுக்கல் வத்தல தோப்பபட்டி வி.மேட்டுப்பட்டி கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் நடந்தது.
இவர்களின் திருமண வரவேற்பு விழா திண்டுக்கல் வேலு மஹாலில் நடந்தது.
மணமக்களின் பெற்றோர்கள் வரவேற்றனர். மணமக்களை அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், எம்.பி., சச்சிதானந்தம், முன்னாள் ஒன்றிய தலைவர் ஆர்.வி.என். கண்ணன், முன்னாள் மேயர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி, ஆண்டியம்பலம், தி.மு.க., மாவட்ட பொருளாளர் விஜயன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜசேகர், அங்கு விலாஸ் செல்ல முத்தையா,ஆக்சிஸ் வெங்கடேஷன், பத்திர எழுத்தாளர்கள் செந்தமிழ் பிரபாகரன், சத்தியகுமார், பிரொபஷனல் கொரியர் நிர்வாக இயக்குனர் கபிலன், மேனேஜர் கண்ணன், முன்னாள் கால்நடை பராமரிப்புத்துறை ஆறுமுகம், ஆடிட்டர் பார்த்தசாரதி, அட்சயஸ்ரீ பேவர் பிளாக் உரிமையாளர் சரவணன், தொழிலதிபர்கள் மணிமாறன், சரவணன், ராஜரத்தினம், ராஜ சுகுமார், கந்தசாமி, வழக்கறிஞர் பத்மநாபன் வாழ்த்தினர்.

