/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு
/
முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு
ADDED : அக் 11, 2025 04:33 AM

திண்டுக்கல்: பழநி முருகன் கோயில் உட்பட திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் கார்த்திகையை யொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள வள்ளி-தெய்வானை, சண்முகர் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி காலையில் பால், இளநீர், சந்தனம் உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
திண்டுக்கல் ஆர்.வி.நகர் கந்தகோட்டம் முருகன் கோயில், என்.ஜி.ஓ., காலனி முருகன் கோயில், ஒய்.எம்.ஆர்., பட்டி முருகன் கோயில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பழநி : பழநி முருகன் கோயிலில் புரட்டாசி கார்த்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதை யொட்டி அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்க மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை, ஆறு கால பூஜை நடைபெற்றது. உள்ளூர்,வெளியூர், வெளி மாநில பக்தர்கள் படிப்பாதை, வின்ச் மூலம் கோயில் சென்றனர். பக்தர்களின் வருகை அதிகளவில் இருந்ததால் குடமுழுக்கு மண்டபம் வழியாக படிப்பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் சில மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் நீண்ட நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். கோயில் சார்பில் இலவச பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலையில் திருக்கல்யாணம் மண்டபத்தில்விளக்கு பூஜை ,சாயரட்சை பூஜைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி புறப்பாடு நடந்தது. இதைதொடர்ந்து வெளி பிரகாரத்தில் நடந்த தங்கரத புறப்பாட்டில் எழுந்தருளினார்.
நத்தம் : திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. கோயிலை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காமாட்சி மவுனகுருசாமி மடம்,கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதி , குட்டூர் அண்ணாமலையார் கோவில் முருகப்பெருமான் சன்னதியிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.