sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு

/

 முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு

 முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு

 முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு


ADDED : ஜன 28, 2026 07:12 AM

Google News

ADDED : ஜன 28, 2026 07:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்மாவட்டத்தில் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில் உட்பட அனைத்து முருகன் கோயில்களிலும் தை மாத கார்த்திகை பூஜை விழா நடந்தது.இதையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

இதையொட்டி திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடுசெய்தனர். வேம்பார்பட்டி பாலமுருகன் கோயில், நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதி ,குட்டூர் அண்ணாமலையார் கோயில் முருகப்பெருமான் சன்னதியிலும் கார்த்திகையொட்டி பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

ரெட்டியார்சத்திரம் : தருமத்துப்பட்டி அருகே காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியருக்கு பாலாபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்ய மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. இதனுடன் திருவாசக முற்றோதலுடன், விசேஷ பூஜைகளும் நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், கார்த்திகை சிறப்பு அபிஷேகம் நடந்தது.

-






      Dinamalar
      Follow us