/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காஷ்மீர் தாக்குதல் பா.ஜ., வினர் மோட்ச தீபம்
/
காஷ்மீர் தாக்குதல் பா.ஜ., வினர் மோட்ச தீபம்
ADDED : ஏப் 24, 2025 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 28 பேர் ஆத்மா சாந்தியடைய திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் மோட்ச தீபம் ஏற்றி, தீவிரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.மாவட்ட துணைத் தலைவர் சந்திரசேகர், செயலாளர் முத்துக்குமார், மண்டல் தலைவர் ராம் கண்ணன் முன்னிலை வகித்தனர். மண்டல் தலைவர்கள் சுந்தரி, கோபாலகிருஷ்ணன், ஆனந்தகுமார், பொன்ராம், முருகேசன் கலந்து கொண்டர்.

