UPDATED : அக் 16, 2026 07:06 PM
ADDED : அக் 16, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றத்தின் சார்பில் தெற்கு ரதவீதி பஜனை மடம் அருகே வீரபாண்டிய கட்டபொம்மனின் 227வது ஆண்டு குருபூஜை, சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 121ம் ஆண்டு வணிக வெற்றி தினம், சர்வோதயா தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் 125ம் ஆண்டு பிறந்த தினம் நடந்தது. மூவரது உருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.
கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றப் பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் ரமேஷ்பாண்டி முன்னிலை வகித்தார். மூத்தத் தலைவர் அருணகிரி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் பேசினார். மாநகர இளைஞர் பிரிவுத் தலைவர் நாகரத்தினப்பாண்டி நன்றி தெரிவித்தார். ஏற்பாடுகளை நிர்வாகி வைரவேல் செய்திருந்தார்.
