sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 வைரவேலுடன் பழநிக்கு காவடி குழுவினர் பாதயாத்திரை

/

 வைரவேலுடன் பழநிக்கு காவடி குழுவினர் பாதயாத்திரை

 வைரவேலுடன் பழநிக்கு காவடி குழுவினர் பாதயாத்திரை

 வைரவேலுடன் பழநிக்கு காவடி குழுவினர் பாதயாத்திரை

2


ADDED : ஜன 29, 2026 05:50 AM

Google News

ADDED : ஜன 29, 2026 05:50 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வழியாக பழநிக்கு வைர வேலுடன் நகரத்தார் காவடி குழுவினர் பாதயாத்திரையாக சென்றனர்.

பழநி தைப்பூச திருவிழாவை யொட்டி பாதயாத்திரையாக காரைக்குடி, தேவகோட்டை, கானாடுகாத்தான், கண்டனுார் பகுதிகளை சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் குழுவினர் ஆண்டு தோறும் காவடிகளுடன் சென்று வருகின்றனர். இந்தாண்டு ஜன.26 ல் குன்றக்குடியிலிருந்து காவடிகளுடன் புறப்பட்ட இக்குழுவினர் நேற்று முன்தினம் இரவு சமுத்திராபட்டியில் தங்கி சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

நேற்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயில் அருகிலுள்ள வாணியர் பஜனை மடத்தை வந்தடைந்த குழுவினர் அங்கு பூஜைகள் நடத்தி மாரியம்மனை தரிசனம் செய்தனர். இதன் பின் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மயில்காவடியுடன் பழநியை நோக்கி சென்றனர். குழுவினர் ஊர்வலம் முன் பழநி முருகனுக்கு செலுத்தும் வைரவேல் கொண்டு சென்றனர். வழி நெடுக பக்தர்கள் பன்னீர், எலுமிச்சம் பழம், மலர்கள் செலுத்தி அதனை வழிபட்டனர். முருகன் புகழ்போற்றும் பாடல்களை பாடியபடி சென்றவர்களை வழிநெடுகிலும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் வரவேற்று வணங்கினர்.






      Dinamalar
      Follow us