/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' -- கும்பக்கரை அருவிக்கு ரோப் கார் திட்டம்: அதிகாரிகள் ஆய்வு
/
'கொடை' -- கும்பக்கரை அருவிக்கு ரோப் கார் திட்டம்: அதிகாரிகள் ஆய்வு
'கொடை' -- கும்பக்கரை அருவிக்கு ரோப் கார் திட்டம்: அதிகாரிகள் ஆய்வு
'கொடை' -- கும்பக்கரை அருவிக்கு ரோப் கார் திட்டம்: அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜன 10, 2026 04:57 AM

கொடைக்கானல் : கொடைக்கானல் வட்டக்கானல் - கும்பக்கரை அருவி இடையே ரோப் கார் அமைக்கும் திட்டம் குறித்து சென்னை மெட்ரோ நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் ரோடு மார்க்கமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுகின்றனர்.
இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் - பழநி இடையே ரோப் கார் அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில் திட்டம் தொய்வில் உள்ளது.
இதனிடையே நேற்று கொடைக்கானல் வட்டக்கானல் -- கும்பக்கரை அருவி இடையே 8 கி.மீ., துாரம் ரோப் கார் அமைக்கும் திட்டம் குறித்து சென்னை மெட்ரோ நிறுவன அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் அவர்களுடன் சுற்றுலா துறையினர், வருவாய் துறை அதிகாரிகளும் கலந்து கொண்ட னர்.
ஏற்கனவே கொடைக்கானல் பழநி ரோப் கார் திட்டம், ஹெலிபேடு அமைக்கும் திட்டம் போல இதுவும் அறிவிப்போடு நின்று விடாமல் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.