sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாசடைந்த காற்றில் சிக்கித்திணறும் கொத்தப்புள்ளி மக்கள் குடிநீர், ரோடு, சுகாதார பிரச்னைகள் தாராளம்

/

மாசடைந்த காற்றில் சிக்கித்திணறும் கொத்தப்புள்ளி மக்கள் குடிநீர், ரோடு, சுகாதார பிரச்னைகள் தாராளம்

மாசடைந்த காற்றில் சிக்கித்திணறும் கொத்தப்புள்ளி மக்கள் குடிநீர், ரோடு, சுகாதார பிரச்னைகள் தாராளம்

மாசடைந்த காற்றில் சிக்கித்திணறும் கொத்தப்புள்ளி மக்கள் குடிநீர், ரோடு, சுகாதார பிரச்னைகள் தாராளம்


UPDATED : டிச 21, 2025 06:05 AM

ADDED : டிச 21, 2025 06:02 AM

Google News

UPDATED : டிச 21, 2025 06:05 AM ADDED : டிச 21, 2025 06:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரெட்டியார்சத்திரம்: கொத்தப்புள்ளியில் காற்று மாசு அதிகரிப்பால் பலர் சுவாச பாதிப்புகளில் சிக்கி தவிக்கின்றனர். இப்பகுதியில் குடிநீர், சாக்கடை பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.

திண்டுக்கல் -பழனி ரோட்டில் ரெட்டியார்சத்திரத்தை மையமாகக் கொண்டு கொத்தப்புள்ளி உள்ளது. ஊராட்சி ஒன்றியம், போலீஸ் ஸ்டேஷன், வங்கிகள், அரசு அலுவலகங்கள் என தினமும் நுாற்றுக்கணக்கான மக்களின் நடமாட்ட பகுதியாக ரெட்டியார்சத்திரம் உள்ளது. இதனை சுற்றி கொத்தப்புள்ளி, தாதன்கோட்டை, பொம்மனங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் தனியார் கிரஷர்கள் பல இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை உரிய மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. இப்பிரச்னையால் ரெட்டியார்சத்திரம் பகுதியில் வசிப்போர் மட்டுமின்றி பல்வேறு அலுவல்களுக்காக இப்பகுதிக்கு வந்து செல்லும் பலரும் மூச்சுத் திணறல், இதய நோய், காது கேட்கும் தன்மை பாதிப்பு போன்ற பிரச்னைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

கொத்தப்புள்ளி சுற்றிய கிராமங்களில் போதிய குடிநீர், ரோடு, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. பராமரிப்பின்றி சேதமடைந்த அரசு கட்டடங்கள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் விபத்துகளை ஏற்படுத்தும் அவல நிலையில் உள்ளது. பல ஆண்டுகளாக இப்பிரச்னைகள் தொடர்பாக அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் மனு கொடுத்தல், ஆர்ப்பாட்டம் போன்றவை தொடர்கிறது. ஆனால் இவற்றுக்கான நிரந்தர தீர்வு நிறைவேறாத கனவாக உள்ளது.மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முழுமையாக கண்காணிக்கவும், அடிப்படை பிரச்னைகள் மீதான நடவடிக்கையை துரிதப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

வெடி அதிர்வால் வீடுகள் சேதம் தயாளன், Image 1511003 விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர், ரெட்டியார்சத்திரம் : ரெட்டியார்சத்திரம் அருகே அரசு கலைக் கல்லுாரி அமைக்கும் அரசின் நடவடிக்கை வரவேற்புக்குரியது. அதே வேளையில் கொத்தபுள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ரோடுகள் சேதமடைந்துள்ளன. எல்லப்பட்டி, கதிரனம்பட்டி ரோடு பாலங்கள் சீரமைப்பில் அலட்சியத்தால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. அரசு விதிகளுக்கு புறம்பாக பல கல் குவாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் அதிக திறன் கொண்ட வெடி பயன்பாடு, காற்று மாசுபடுத்தும் விதிமீறல் தாராளமாக உள்ளது. கொத்தப்புள்ளியை சுற்றிய கிராமங்களில் கிரஷர் துாசி, அடர் புகை சூழ்ந்து மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக மாறி வருகின்றன. வெடி அதிர்வுகளால் வீடுகள் சேதமடையும் அவலம், பல ஆண்டுகளாக தொடர்கிறது.

ரயில்வே ஸ்டேஷன் நீக்கம் ராமச்சந்திரன், பா.ஜ., விவசாய அணி ஒன்றிய தலைவர், Image 1511005 கெம்மனம்பட்டி : ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராம சாலைகளும் பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ளன. பெருமாள் கோயில் வேலம்பட்டி, அழகுபட்டி, தாதங்கோட்டை, பொம்மனங்கோட்டை, புதுக்கோட்டை, ஜக்காளம்மன்பட்டி ரோடுகள் படு மோசமான நிலையில் உள்ளன. போதிய அளவு நிலத்தடி நீர் இருந்தும் வினியோகத்தில் குளறுபடி நீடிக்கிறது. ரெட்டியார்சத்திரம் துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தினால் போதிய மருத்துவ சேவை கிடைக்க வாய்ப்புள்ளது. கல்வி நிறுவனங்கள்,வணிக முக்கியத்துவம் வாய்ந்த தனியார் நிறுவனங்கள் என பெருகிவரும் சூழலில் ரெட்டியார்சத்திரம் ரயில்வே ஸ்டேஷன் நிறுத்தம் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.-






      Dinamalar
      Follow us