தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்

 கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்

 கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்


ADDED : செப் 05, 2026 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2026 04:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணர் கோயில்கள், வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு கோலாகலமாக நடந்தது.

திண்டுக்கல் மலையடிவாரம் கிருஷ்ணர் கோயிலில் நேற்று காலை முதலே சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையுடன் வழிபாடுகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு கோயிலுக்கு அழைத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆஞ்சநேயர் கோயில், கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் கோயிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமானார் தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.முள்ளிபாடி கோபால கிருஷ்ணர் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை உற்ஸவர் கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஊர்வலமாக எடுத்துச்சென்று சன்னதி முன் உறியடிக்கும் வைபவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.திண்டுக்கல் எம்.வி.எம்.,நகர் தென்திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் பத்மாவதி தாயார் சன்னதியில் ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடமிட்டு வந்து வழிபாடு செய்தனர். குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன.

ரெட்டியார் சத்திரம்: ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில் மூலவர், செங்கமலவல்லி தாயாருக்கு திரவிய அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அனுக்கிரக பைரவருக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. தருமத்துப்பட்டி சக்தி விநாயகர் கோயிலில் விஸ்வஹிந்து பரிஷத் சார்பில் நடந்த விழாவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடமணிந்து பங்கேற்றனர். குழந்தைகளுக்கு பரிசுகள், இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பிருந்தாவன தோப்பு லட்சுமி நாராயண பெருமாள் கோயில், செம்பட்டி கோதண்டராமர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பலவகையான பலகாரங்கள், இனிப்புகள், பழங்கள் படையல் இடப்பட்டன. வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனைகள் நடந்தது. குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து பங்கேற்றனர். நத்தம், சாணார்பட்டி, திண்டுக்கல், செந்துறை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.

பழநி: பழநி பெரிய கடை வீதி வேணுகோபால சுவாமி கோயில், மேலரத வீதி லட்சுமி நாராயண பெருமாள் கோயில், பாலசமுத்திரம் வீர ஆஞ்சநேயர் கோயில், பாலாறு பொருந்தலாறு அணை சாந்தவீர ஆஞ்சநேயர் கோயில், ராமநாத நகர் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கொடைக்கானல்: பண்ணைக்காடு ஸ்ரீஹரி பஜனை மடாலயத்தில் நடந்த விழாவில் கோமாதா ராமர் பாதத்தில் மழலையர்கள் நடந்தனர். மழலையர்கள் கிருஷ்ணன், ராதை வேடங்கள் அணிந்திருந்தனர். அன்னதானம் நடந்தது. தாண்டிக்குடி ராமர் கோயில், கொடைக்கானல் வரதராஜ பெருமாள், மலைப்பகுதியில் உள்ள ராமர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us