தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோயில்களில் கும்பாபிஷேகம்

 கோயில்களில் கும்பாபிஷேகம்

 கோயில்களில் கும்பாபிஷேகம்


ADDED : மார் 09, 2026 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 06:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நிலக்கோட்டை:: நிலக்கோட்டையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத அகோபில நரசிம்ம பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

சிற்ப ஆகம முறைப்படி புனரமைக்கப்பட்ட இக்கோயிலில் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடந்தன.

வானத்தில் கருடன் வட்டமிட 'கோவிந்தா, நாராயணா' என்ற பக்தி முழக்கங்களுக்கு இடையே கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகவேல், திருப்பணிக் குழு தலைவர் காளிமுத்து, அதிகாரிகள் முன்னெடுத்தனர். முன்னாள் எம்.பி., உதயகுமார், முக்கிய பிரமுகர்கள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

வேடசந்துார்: ராமாபுரம் ஊராட்சி மண்டபம் முடக்காற்று கருப்பணசாமி, விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

பல்வேறு நதிகளில் இருந்து புனிதநீர் கொண்டு வந்து சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன.

வானத்தில் இரு கருடன் வட்டமிட கலசம் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ராஜகாளியம்மன் கோயில் அர்ச்சகர் சதாசிவ குருக்கள் கும்பாபிஷேக பணிகளை செய்தார். கோயில் நிர்வாகத் தலைவர் நடராஜன், செயலாளர் ஜெயசந்திரன், பொருளாளர் குழந்தை ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கன்னிவாடி: டி.புதுப்பட்டி அருகே ஒட்டகோயில்பட்டியில் விநாயகர், பாப்பாத்தி அம்மன், செல்லியம்மன், கோமுட்டியம்மன், மதுரைவீரன், கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

யாகசாலை பூஜைகளுக்கு பிறகு கடம் புறப்பாடு, கருட தரிசனத்துடன் கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது.

மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி முரளி சங்கர் சுவாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us