sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 திருஆவினன்குடி கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

/

 திருஆவினன்குடி கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

 திருஆவினன்குடி கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

 திருஆவினன்குடி கோயிலில் இன்று கும்பாபிஷேகம்


ADDED : டிச 08, 2025 04:55 AM

Google News

ADDED : டிச 08, 2025 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.

பழநி முருகன் கோயில் கட்டுப்பாட்டின் கீழ் அடிவாரத்தில் குழந்தை வேலாயுதசுவாமி உள்ள திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம் இன்று காலை 6: 00 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் நடக்கிறது. டிச.4ல் கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. தினமும் வேள்வி, பல்வேறு சிறப்பு பூஜை நடந்தது.

வள்ளிகும்மியாட்டம் உள்ளிட்டவையும் நடந்தது. இன்று அதிகாலை 4:00 மணிக்கு ஆறாம் கால வேள்வியில் சந்திரன் வழிபாடு, நீர் கடவுள் வழிபாடு உள்ளிட்டவை நடைபெறும். காலை 6:30 மணிக்கு மூலவர் சன்னதி, திருச் சுற்றில் உள்ள சன்னதி களுக்கு விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்து, தீபாராதனை நடக்கும்.

காலை 9:00 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு குழந்தை வேலாயுதசாமி வீதி உலா நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூங்கா ரோடு, பாளையம் ரோடு, சன்னதி வீதி, குளத்து ரோடு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us