ADDED : ஏப் 27, 2026 11:19 PM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி:பித்தளைப்பட்டியில் தும்பிக்கையாழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமம், மூலிகை வேள்வியுடன் இரு கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆன்மிக சொற்பொழிவு, கிராம பொங்கல் வழிபாடு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
-
