ADDED : செப் 13, 2026 04:03 PM
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே உழவர்குடி சர்வசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இக்கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் திருச்செந்துார், ராமேஸ்வரம், திருமலைக்கேணி, அழகர் கோவில் மலை புனித நுாபுர கங்கை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள், முளைப்பாரி மேளதாளம் முழங்க கோயில் முன் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு கொண்டுவரப் பட்டன. நேற்று காலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்ற, கருடன் வட்டமிடும் தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை உழவர்குடி கிராம மக்கள் செய்திருந்தனர்.
