ADDED : செப் 17, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
கள்ளிமந்தையம், செப்.18-
கொத்தயம் கிராமத்தில் ஆறுமுகத்தம்மன், விநாயகர், கருப்புசாமி கோயில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது. முதல் நாள் விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், புண்ணிய தீர்த்தம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
நேற்று ஆறுமுகத்தம்மன், விநாயகர், கருப்புசாமி தெய்வங்களுக்கு பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களால் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
