/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எலக்ட்ரானிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவது மிகவும் அவசியம்: குப்பையுடன் எரிவதால் எல்லா உயரினங்களும் பாதிப்பு

UPDATED : ஜன 08, 2026 06:14 AM
ADDED : ஜன 08, 2026 06:05 AM

மனித நாகரிக வளர்ச்சியில் தற்போது மக்காத குப்பையின் ஆதிக்கம் அதிகரித்து பூமியை பாழ்படுத்தும் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு மனித குலத்தால் தெரு , குப்பை தொட்டிகளில் வீசப்படும் பொருட்களை முறைப்படி மறுசுழற்சிக்கும், மக்க வைக்க நடவடிக்கை எடுக்காமல் பல இடங்களில் தீயிட்டு கொளுத்தப்படும் அவலமும் நடக்கிறது. இதனால் பல்வேறு நோய்கள் மனிதருக்கும் பிற உயிரினங் களுக்கும் ஏற்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மை திட்டம் என தற்போது உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நிரந்தர, ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை அமர்த்தி மக்கும் பொருட்களை சேகரித்து உரமாக மாற்றும் பணிகள் பரவலாக நடக்கின்றன. ஆனாலும் இது முழு அளவில் அக்கறையுடன் செய்யப்படும் பணியாக நடக்கவில்லை என்பதை கிராமப்புற ரோடுகளில் பயணிப்போர் எளிதாக காண முடியும். பல இடங்களிலும் பிளாஸ்டிக், எலக்ட்ரானிக் கழிவு பொருட்கள் கலந்த பொருட்களை துாய்மை பணியாளர்களே தீயிட்டு எரிக்கின்றனர். பல இடங்களில் ஓடை, ஆறுகளின் பாலங்களுக்கு அடியில் கொட்டி எரிக்கும்போது பாலத்தின் ஆயுளும் வெகுவாக குறைந்து சிதையும் நிலையும் உள்ளது.
இதோடு மனிதர்களுக்கு புற்றுநோய், காசநோய், உடல்ஊனம் என அபாயகரமான நோய்கள் உருவாகிறது. மண்ணில் புதையும் பொருட்கள் நுாறு ஆண்டுகள் கடந்தாலும் மக்காமல் உள்ளதால் மண் வளத்தை கெடுத்து தாவரங்கள், விலங்குகள், மனிதர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இத்தகைய பொருட்களை சேகரித்து மாவட்ட அளவில் முறையாக அழிப்பதற்கான ஏற்பாட்டினை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும்.