ADDED : செப் 18, 2026 10:21 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், செப்.19
திண்டுக்கல் நாகல் நகர் சுக்கான்மேடு கூலித்தொழிலாளி ரவி 55. நேற்று வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வந்தார். பின்னர் சாப்பிட்டதும் படுத்து துாங்கிவிட்டார். இரவு 8:00 மணிக்கு வீட்டில் கூரைக்காக அமைக்கப்பட்ட கட்டைகளில் தீப்பிடித்து ஓடுகள் உள்ளே விழுந்தன. அதற்குள் சிக்கிக்கொண்ட ரவியால் வெளியே வர முடியவில்லை. அருகில் வசிப்பவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இதற்கிடையில் வீட்டிற்குள் அதிகபடியான வெப்பம் காரணமாக ரவி இறந்தார். தீ பற்றியதற்கான காரணம் குறித்து வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
