நுாற்பாலை வேலையில் தொழிலாளர்கள் ஆர்வம் மழையின்றி விவசாய பணிகள் முடக்கம் எதிரொலி
நுாற்பாலை வேலையில் தொழிலாளர்கள் ஆர்வம் மழையின்றி விவசாய பணிகள் முடக்கம் எதிரொலி
ADDED : ஆக 28, 2026 03:50 AM
ரெட்டியார்சத்திரம்: போதிய மழையின்றி விவசாய பணிகள் முடக்கம் எதிரொலியாக செங்கல் சூளை, நுாற்பாலை வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம், பலக்கனுாத்து, கன்னிவாடி, தருமத்துப்பட்டி, சித்தையன்கோட்டை, வீரக்கல், வக்கம்பட்டி பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை இல்லை.
பயறு வகைகளை கைவிட்டு பெரும்பாலோர் மக்காச்சோள சாகுபடிக்கு மாறினர்.
கடந்த 5 மாதங்களாக வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக தொடர்கிறது. கால்நடை வளர்ப்பிற்கான பசுந்தீவன, புல் உற்பத்தியும் வெகுவாக பாதித்துள்ளது.
சாகுபடிக்கான பணிகள், கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்கள் முடங்கி வேலைவாய்ப்பு, வருவாய் ஆதார பாதிப்பால் கூலித்தொழிலாளர்களின் அன்றாட வாழ்வில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இதையடுத்து கூலித் தொழிலாளர்கள் பலர் செங்கல் சூளை, நுாற்பாலைகளுக்கு கூலி வேலைக்கு செல்ல துவங்கியுள்ளனர்.
குறைந்த சம்பளம், வேலைப்பளு உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தபோதும் குக்கிராம கூலித்தொழிலாளர்களால் நுாற்பாலை வேலைக்கான மவுசு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
