/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரயில்வே கிராசிங்களில் மேம்பாலங்கள் இல்லாததால் அவதி; போக்குவரத்து அதிகரிப்பால் தினம் தினமும் நெரிசல்
/
ரயில்வே கிராசிங்களில் மேம்பாலங்கள் இல்லாததால் அவதி; போக்குவரத்து அதிகரிப்பால் தினம் தினமும் நெரிசல்
ரயில்வே கிராசிங்களில் மேம்பாலங்கள் இல்லாததால் அவதி; போக்குவரத்து அதிகரிப்பால் தினம் தினமும் நெரிசல்
ரயில்வே கிராசிங்களில் மேம்பாலங்கள் இல்லாததால் அவதி; போக்குவரத்து அதிகரிப்பால் தினம் தினமும் நெரிசல்
ADDED : ஜன 27, 2026 06:40 AM

பழநி: திண்டுக்கல் மாவட்டத்துடன் திருப்பூர் ஈரோடு கோவை மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலைகளில் ரயில்வே கிராசிங் பகுதியில் மேம்பாலம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தை பழநி வழியாக ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை புது தாராபுரம் ரோடு, பழைய தாராபுரம் ரோடு இணைக்கிறது. திருப்பூர், கோவை மாவட்டங்களை மடத்துக்குளம் வழி, கொழுமம் வழி சாலை இணைக்கிறது. பழநியில் இருந்து திண்டுக்கல் நகரை திண்டுக்கல்- பழநி சாலை இணைக்கிறது .குறிப்பாக பழைய தாராபுரம் ரோடு கோதைமங்கலம் பகுதி, புது தாராபுரம் ரோடு சத்யா நகர் பகுதி, திண்டுக்கல் ரோட்டில் ஆயக்குடி பகுதி, சத்திரபட்டி பகுதி, உடுமலை ரோட்டில் தாழையூத்து பகுதிகளில் ரயில்வே கிராசிங் பகுதிகளில் மேம்பாலம் இல்லை. பழநி நகருக்குள் தற்போது தைப்பூச பக்தர்கள் பாதயாத்திரையாக அதிக அளவில் வருகின்றனர் அவர்களுடன் ஏராளமான வாகனங்கள் வருகிறது. இதனால் நகருக்குள் வந்து செல்லும் வாகனங்கள் எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
புது தாராபுரம் ரோடுரயில்வே கிராசிங் பகுதியில் ரயில் வரும் நேரங்களில் கேட் அடைக்கப்படும் போது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. காலை, மாலை நேரத்தில் ரயில்வே கேட் அடைக்கப்படுவதால் பள்ளி, அலுவலகம், கல்லுாரிக்கு செல்பவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும் அவசர மருத்துவ தேவைக்காக செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அரை மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. நேற்று முன்தினம் பழநி,சத்திரப்பட்டி ரயில்வே கிராசிங் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் ரயில் வரும் போது கார் ஒன்று ரயில்வே கேட் தண்டவாளம் இடையே நின்றது .இதனால் அங்கு காத்திருந்த வாகன ஓட்டிகளுக்கு அச்சம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக விபத்து ஏற்படாமல் ரயில் கடந்து சென்றது. அதன் பின் கேட் திறக்கப்பட்டு கார் வெளியே வரஅப்பகுதியில் நின்றிருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.இது போன்ற நிலையை கருதி இங்கு மேம்பாலங்கள் அமைக்க சம்ந்தப்பட்ட துறையினர் முன் வர வேண்டும்.
........
நிலம் கையகப்படுத்த தாமதம்
புது தாராபுரம் ரோடு குபேர பட்டினம் அருகே உள்ள ரயில்வே கிராசிங் பகுதியில் மேம்பாலம் அமைக்க மாநில அரசு இடம் கையகப்படுத்தி தர தாமதம் செய்து வருகிறது. இந்த ரயில்வே கிராசிங் பழநி ரயில்வே ஸ்டேஷன் மிக அருகில் உள்ளது. மத்திய அரசு சார்பில் ரயில்வே நிர்வாகம் புதிய ரயில்களை இயக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அதிக ரயில்கள் இயக்கப்படும் போது இந்த ரயில்வே கேட் பகுதியில் அடிக்கடி ரயில் வரும் நிலை ஏற்படும். இதனால் அதிக நேரம் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்படும். மாநில அரசு உரிய நிலத்தை கையகப்படுத்தி பணிகளை விரைந்து துவங்க வேண்டும். இதோடு மக்கள் பயன்பாட்டிற்கு பழநி வரும் சாலைகளில் உள்ள அனைத்து ரயில்வே கிராசிகளிலும் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கனகராஜ், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர்,பழநி.

