ADDED : ஏப் 05, 2025 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் இளங்கலை, முதுகலை இறுதி ஆண்டு மாணவிகளுக்கு விளக்கேற்றும் விழா நடந்தது.
தமிழ் துறை உதவி பேராசிரியர் கோகிலமீனா வரவேற்றார். தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் தேன்மொழி, சக்தி செவிலியர் கல்லுாரி முதல்வர் ஜானகி தேவி, சக்தி கல்வி குழும ஆலோசகர் குப்புசாமி முன்னிலை வகித்தனர். ஈரோடு வெள்ளாளர் மகளிர் கல்லுாரி முன்னாள் முதல்வர் சுசீலா, தமிழ் துறை உதவி பேராசிரியர் மலர்விழி பங்கேற்றனர்.

