sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தி.மு.க., பிரமுகர் மீது நில அபகரிப்பு புகார்

/

தி.மு.க., பிரமுகர் மீது நில அபகரிப்பு புகார்

தி.மு.க., பிரமுகர் மீது நில அபகரிப்பு புகார்

தி.மு.க., பிரமுகர் மீது நில அபகரிப்பு புகார்


ADDED : ஜூலை 23, 2011 09:39 PM

Google News

ADDED : ஜூலை 23, 2011 09:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : வேடசந்தூர் ஒன்றிய தலைவர் (தி.மு.க.,) பிரியம் நடராஜன், 25 ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளதாக திண்டுக்கல் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே வீரப்புடையான்பட்டியை சேர்ந்தவர் சண்முகம்(48). இவர், திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகனிடம் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது: கன்னிவாடி அருகே சிரங்காடி கிராமத்தில் எனது பூர்வீக சொத்தாக 25 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை வேடசந்தூர் ஒன்றிய தலைவர் பிரியம் நடராஜன், தனது மகள் சங்கீதா பெயரில், 2009 நவ., 20, டிச., 14 தேதிகளில் போலியாக பத்திரம் தயாரித்து, நிலத்தை அபகரித்துள்ளார். மேலும் தோட்டத்தில் கிணற்றுடன் நாங்கள் குடியிருக்கும் இருக்கும் வீட்டை காலி செய்ய சொல்லி, அடியாட்களுடன் காரில் வந்து தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். வீட்டு வரி ரசீதுகளை தனது பதவியை பயன்படுத்தி, அவர் பெயருக்கு மாற்றி விட்டார். எனவே, பிரியம் நடராஜன் மீது நில அபகரிப்பு வழக்கில் போலீசார் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.










      Dinamalar
      Follow us