/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தாடிகொம்பு கோயில் நில அபகரிப்பு; அறங்காவலர், அதிகாரிகள் ஆய்வு
/
தாடிகொம்பு கோயில் நில அபகரிப்பு; அறங்காவலர், அதிகாரிகள் ஆய்வு
தாடிகொம்பு கோயில் நில அபகரிப்பு; அறங்காவலர், அதிகாரிகள் ஆய்வு
தாடிகொம்பு கோயில் நில அபகரிப்பு; அறங்காவலர், அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஆக 27, 2025 12:43 AM
திண்டுக்கல்; தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் கட்டளை சொத்தை ஆக்கிரமிப்பு செய்தது விற்பனை செய்தது தொடர்பாக சொத்துக்களை அறங்காவலர்கள் ,அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான கட்டளை சொத்துக்களை தனிநபர் 28 ஆண்டுகளாக சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து விற்பனை செய்ததாக ஹிந்து முன்னணி சார்பாக ஆவணங்களுடன் அறநிலையத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டு கள ஆய்வு செய்ய முடிவு செய்ததை தொடர்ந்து நேற்று கோயில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, கோயில் செயல் அலுவலர் யுவராஜ், அறங்காவலர் ராமானுஜம் ,கோவில் ஊழியர்கள் தாடிக்கொம்பு ரோடு வாணி விலாஸ் மேடு அருகே ஆக்கிரமிப்பு செய்து பத்திரப்பதிவு செய்த கோயில் இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.