தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/வழக்கறிஞர் கார் கடத்தல்

வழக்கறிஞர் கார் கடத்தல்

வழக்கறிஞர் கார் கடத்தல்


ADDED : மார் 13, 2024 12:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2024 12:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாடிக்கொம்பு : திண்டுக்கல்லில் வழக்கறிஞர் காரை கடத்தி சென்ற மூவரை போலீசார் தேடுகின்றனர்.

திண்டுக்கல் சென்னமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வழக்கறிஞர் அசரப் அலி 44. சென்னை சூளைமேட்டை சேர்ந்த சாம்பசிவராவ் என்பவரிடம் காரை விலைக்கு வாங்கி ஓட்டி வந்த நிலையில், அந்தக் காரை விற்பனை செய்வதற்காக செட்டிநாயக்கன்பட்டி தனியார் கார் விற்பனை நிலையத்தில் நிறுத்தி உள்ளார்.

வேலுாரை சேர்ந்த பிரசன்னா, சென்னை சோமாசிவாடியை சேர்ந்த மணி காரை ஓட்டி பார்ப்பதாக கூறி எடுத்து சென்றனர். கார் கம்பெனியை சேர்ந்த ஊழியர் செந்தில்குமாரை உடன் அனுப்பினர். வழியில் தண்ணீர் பாட்டில் வாங்கி வரக்கோரி செந்தில்குமாரை கடைக்கு அனுப்பினர். அந்த நேரத்தில் காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.

அலைபேசியில் தொடர்பு கொண்டபோது திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜகணபதி காரை எடுத்து வர சொன்னார் என்றும், எதுவாக இருந்தாலும் அவரிடம் பேசிக் கொள்ளுமாறு கூறி இணைப்பை துண்டித்தனர். தாடிக்கொம்பு எஸ்.ஐ., பிரபாகரன் விசாரிக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us