ADDED : டிச 10, 2025 08:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: இ-பைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் 15 நாளாக நீதிமன்ற புறக்கணிப்பு, மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம் என அடுத்தடுத்து போராட்டம் நடத்தி எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு பணிகளை புறக்கணித்து உண்ணாவிரதம் நடத்தினர். சங்கத்தலைவர் குமரேசன், செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தனர்.

