ADDED : ஆக 13, 2025 02:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நிர்வாகம், இந்தியன் ரெட்கிராஸ் இணைந்து பாரதிபுரம் நகர்புற வீடற்றோர் காப்பகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தின. முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா தலைமை வகித்தார். செயலாளர் நீதிபதி திரிவேணி, ஆர்.டி.ஓ., சக்திவேல், தாசில்தார் பாண்டியராஜ், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி காஜாமைதீன் கலந்துகொண்டனர்.
நகர்புற வீடற்றோர் காப்பகத்தில் வசித்துவரும் 40 முதியவர்களுக்கும் போர்வை, துண்டு, பற்பசை உள்ளிட்ட தலா ரூ. ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டன. ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓய்வூதியம் பெறுவதற்கான 25 மனுக்கள் பெறப்பட்டது.

