/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எலுமிச்சை விலை சரிவு கிலோ ரூ.10க்கு விற்பனை
/
எலுமிச்சை விலை சரிவு கிலோ ரூ.10க்கு விற்பனை
ADDED : ஜன 26, 2026 04:31 AM
ஒட்டன்சத்திரம்: வரத்து அதிகரிப்பால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் எலுமிச்சை விலை சரிவடைந்து கிலோ ரூ.10க்கு விற்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் மலைக்கிராமங்களான வடகாடு, கண்ணனுார், கோமாளிபட்டியில் எலுமிச்சை அதிக பரப்பில் சாகுபடி ஆகிறது. கடந்த மாதம் தேவை அதிகமாக இருந்ததால் இந்த மார்க்கெட்டில் கிலோ ரூ.45க்கு மேல் விற்பனையானது. தற்போது வரத்து அதிகமாகவும், நுகர்வு குறைவாகவும் உள்ளது. இதனால் விலை சரிவடைந்து கிலோ ரூ.10க்கு விற்கப்படுகிறது. இது செடிகளில் இருந்து பறித்தெடுக்கும் கூலிக்கு கூட கட்டுப்படியாகாது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
விவசாயி மணிகண்டன் கூறுகையில் 'அளவில் பெரிய எலுமிச்சை கிலோ ரூ.20க்கும், குறைந்த மற்றும் நடுத்தரமானவை ரூ.10க்கும் மட்டுமே விற்பனை ஆகிறது' என்றார்.

