ADDED : மார் 23, 2026 06:34 AM
அ நிறம் | அளவு
நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே கவிராயபுரம் குழந்தை இயேசு சர்ச்சில் தவக்கால ஆராதனை கூட்டம் நடந்தது.
வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, அய்யம்பாளையம், சின்னுப்பட்டி, மேலகோவில்பட்டி, மைக்கேல்பாளையம், கல்லடிப்பட்டி சர்ச்சுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பாதயாத்திரையாக கவிராயபுரம் வந்தனர்.
குழந்தை இயேசு சர்ச்சில் திருஜெபமாலை, திருமறை ஆராதனை, சிலுவைப்பாதை, நற்கருணை ஆசியில் பங்கேற்றனர்.
இயேசு கிறிஸ்து பாடுபட்ட நிகழ்வை நினைவு கூர்ந்தனர். பாதிரியார் லாரன்ஸ் தலைமையில் உலக அமைதி வேண்டி சிறப்பு கூட்டுத் திருப்பலி நடந்தது.
