ADDED : ஜன 25, 2026 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி: கோபால்பட்டியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொழுநோய் கண்டு பிடிப்பு, கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் ஜெனி தலைமை வகித்தார். சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சாதனா, அனுகிரஹா கல்லுாரி முதல்வர் ஜார்ஜ் பெர்னாட்ஷா முன்னிலை வகித்தனர்.
ஏற்பாடுகளை கல்லுாரி துணை முதல்வர் ஞான ஆரோக்கியம், துணை இயக்குனர் அலுவலக நலக் கல்வியாளர் சாகுல், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் ஜோதிபாஸ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வகுமார், சுகாதார ஆய்வாளர் முனியப்பன், கிராம சுகாதார செவிலியர் அசுந்தா மேரி செய்திருந்தனர்.

