/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விடுதலை வீரர்கள் நினைவு தினம்
/
விடுதலை வீரர்கள் நினைவு தினம்
ADDED : ஜன 17, 2026 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் விடுதலை போராட்டத் தியாகி கொடிகாத்த திருப்பூர் குமரனின் 94ம் ஆண்டு நினைவு தினம்,
முன்னாள் பிரதமர் லால்பகதுார் சாஸ்திரியின் 60ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப் பட்டது.இம்மன்றத்தின் பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். மாநகர சிவாஜி மன்ற செயற்குழு உறுப்பினர் சசிக்குமார் முன்னிலை வகித்தார். மன்ற மாநகரச்செயலாளர் எழுமலை வரவேற்றார். சிவாஜி மன்ற துணைத் தலைவர் பெருமாள் பேசினார். ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட காமராஜர் சிவாஜி தேசிய பேரவை நிறுவனர் வைரவேல் செய்திருந்தார்.

