ADDED : ஜூலை 30, 2025 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்; வேடசந்துார் லயன்ஸ் சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு , பதவி ஏற்பு விழா நடந்தது. சங்க முன்னாள் தலைவர் லுார்துவராஜ் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் விரா.சாமிநாதன், ரங்கராஜ், மணிமுத்து முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாவட்ட ஆளுநர் ரகுவரன் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் புனித நேரு, செயலாளர் ஆரோக்கியராஜ், பொருளாளர் பெருமாள்சாமி ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆடிட்டர் ரவீந்திரன், புதிய உறுப்பினர்களாக ஈஸ்வரமூர்த்தி, சச்சின் ஆகிய இருவரை இணைத்தனர்.
ஞான ஒளி பார்வையற்றோர் சங்கத்திற்கு சேலைகள், சட்டைகள், போர்வைகள், அரிசி உள்ளிட்டவற்றை வழங்கினர். நிர்வாகிகள் அழகுராஜா, வேலுச்சாமி, ஜெயராஜா பங்கேற்றனர்.