
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: - கொடைக்கானலில் லயன்ஸ் இன்டர்நேஷனல் கருத்தரங்கு நடந்தது.மாவட்ட தலைவர் அய்யாதுரை தலைமை வகித்தார். இயக்குனர்கள் சுபாஷ் பாபு, வாசன், முன்னாள் இயக்குனர்கள் தனபாலன், நாகராஜன் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழல் தலைவர் ஆஷா ரவீந்திரனுக்கு விருது வழங்கப்பட்டது. சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. சுற்றுச்சூழல் தலைவர் டி. பி. ரவீந்திரன் பங்கேற்றார். சன் லயன்ஸ் சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர் சுரேஷ் பால்ராஜ், பொருளாளர் நீத்து கிரண் முன்னிலை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர் ஆஷா நன்றி கூறினார்.

