ADDED : செப் 22, 2026 10:14 PM
அ நிறம் | அளவு
கொடைக்கானல், செப்.23-
குண்டுபட்டி ஏ காலனியை சேர்ந்தவர் சக்திவேல் 26. இவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கொடைக்கானல் ஏரிச்சாலையில் ரோந்து சென்ற போலீசார் சக்திவேலை கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
