UPDATED : அக் 10, 2026 05:06 AM
ADDED : அக் 10, 2026 01:06 AM
அ நிறம் | அளவு
வேடசந்துார்: விருதலைப்பட்டி டீக்கடையில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக வேடசந்துார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி, கூம்பூர் எஸ்.ஐ., ரவிச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் கடையில் சோதனை நடத்தினர்.
அங்கு சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட ரேவதியை 44, கைது செய்தனர். அவரிடம் இருந்து 32 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
