UPDATED : அக் 10, 2026 04:00 PM
ADDED : அக் 10, 2026 03:14 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்: வேடசந்துார் கருப்பத்தேவனுாரில் சட்ட விரோதமாக வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி, எஸ்.ஐ., பாலசுப்பிரமணி உள்ளிட்ட போலீசார், ராஜாங்கம் 45, வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 77 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். ராஜாங்கத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.
