sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 09, 2026 ,பங்குனி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மெயின் ரோடுகளில் தாழ்வான மரக்கிளைகளால்...:  விபத்து: வாகனமும் சேதமாவதால் டிரைவர்கள் அவதி

/

மெயின் ரோடுகளில் தாழ்வான மரக்கிளைகளால்...:  விபத்து: வாகனமும் சேதமாவதால் டிரைவர்கள் அவதி

மெயின் ரோடுகளில் தாழ்வான மரக்கிளைகளால்...:  விபத்து: வாகனமும் சேதமாவதால் டிரைவர்கள் அவதி

மெயின் ரோடுகளில் தாழ்வான மரக்கிளைகளால்...:  விபத்து: வாகனமும் சேதமாவதால் டிரைவர்கள் அவதி


UPDATED : ஜன 24, 2026 05:48 AM

ADDED : ஜன 24, 2026 05:28 AM

Google News

UPDATED : ஜன 24, 2026 05:48 AM ADDED : ஜன 24, 2026 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் தாழ்வானமரக்கிளைகளால் வாகனங்கள் சேதமடைந்து விபத்தில் சிக்குகின்றன.

மாவட்டத்தில் கொடைக்கானல், தாண்டிக்குடி ஆடலுார், பன்றிமலை, பாச்சலுார், நத்தம், ஒட்டன்சத்திரம், பழநி, சிறுமலை உள்ளிட்ட பகுதிகள் மலை சார்ந்த பகுதியாக உள்ளது. இதற்கான ரோடுகள் அடர்ந்த வனப்பகுதி மார்க்கமாகவே செல்கிறது. இடை வழித்தடமான இந்த ரோடுகளின் இருபுறம் அடர்ந்துள்ள புதர் செடிகள் அகற்றாத நிலையில் எதிரே வரும் வாகனம் தெரியாத நிலை உள்ளது. இடையூறு ஏற்படுத்தும் நிலையில் தாழ்வான மரக்கிளை அதில் ஊடுருவியுள்ள செடி, கொடிகள் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களின் கூறை, கண்ணாடிகளில் உரசி சேதப்படுத்துகிறது. பற்றாக்குறைக்கு ரோட்டில் இயற்கை இடையூரின் போது விழும் மரங்களும் அரைகுறை நிலையில் அகற்றி விபத்துக்களை ஏற்படுத்துவதாக உள்ளது.

தற்போது மலைப்பகுதிகளுக்கு அரசு புதிய பஸ்கள் இயக்கும் நிலையில் இவ்வாறான இடையூறுகள் பஸ்சிற்கு சேதத்தை ஏற்படுத்துவதும், பயணிகள் காயமடைவதுமாக உள்ளது.

இதற்கு டிரைவர், கண்டக்டர்கள் ஆஜாக்கிரதையாக இயக்கியதாக நிர்வாகம் நடவடிக்கை எடுக்கிறது.

நெடுஞ்சாலைத்துறை மாவட்ட முழுவதும் உள்ள மலை ரோடுகளில் தாழ்வாக உள்ள மரம் செடி, கொடிகளை அகற்றி இடையூறில்லாத போக்குவரத்து தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.



தேவை கூட்டு முயற்சி

நெடுஞ்சாலைத் துறை தலைமையில் வனத்துறை, வருவாய்த்துறை, போக்குவரத்துறை அதிகாரிகள் இணைந்து ரோட்டோரம் உள்ள தாழ்வான மரக்கிளை, விபத்து அபாய மரங்கள், செடி, கொடிகளை கூட்டாக அகற்ற முன்வரும் பட்சத்தில் இப்பிரச்னைக்கு தீர்வு கிட்டும். இதனால் விபத்தில்லா பயணமும், வாகனங்கள் சேதமடைவது தவிர்க்கப்படும்.



கோபால், இயற்கை ஆர்வலர், பூண்டி.






      Dinamalar
      Follow us