தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விடுமுறை நாளில் இயந்திரப் பயன்பாடு

 விடுமுறை நாளில் இயந்திரப் பயன்பாடு

 விடுமுறை நாளில் இயந்திரப் பயன்பாடு


ADDED : பிப் 09, 2026 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 05:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொடைக்கானல்: கொடைக்கானலில் இயந்திர பயன்பாடு தடை செய்யப்பட்ட நிலையில் விடுமுறை நாளில் தாராளமாக நடக்கிறது.

கொடைக்கானலில் மலைத்தள பாதுகாப்பு விதிகளின்படி இயந்திர பயன்பாடுகளுக்கு தடை உள்ளது.

இருப்பினும் அதிகாரிகள் உடந்தையுடன் பயன்பாடு தாராளமாக நடக்கிறது.

ஆர்.டி.ஓ., திருநாவுக்கரசு பிப்.,1 முதல் மலைப்பகுதியில் உள்ள இயந்திரங்கள் தரைப்பகுதிக்கு இறங்க வேண்டும்; மீறும் பட்சத்தில் அபராதத்துடன் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.

ஆனால் அந்த எச்சரிக்கை காற்றில் விடப்பட்டு நேற்று கொடைக்கானல் நாயுடுபுரம் இ.சி.சி., ரோடு குடியிருப்புப் பகுதியில் இயந்திரம் மூலம் மண் சீரமைக்கும் பணி நடந்தது.

விடுமுறை நாளில் நடந்தேறும் விதிமீறல் குறித்து இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us