/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தடையை மீறி மலைப்பகுதியில் இயந்திரப் பயன்பாடு ஜோர்; கண்டுகொள்ளாத அதிகாரிகளால் இயற்கை வளத்திற்கு ஆபத்து

ADDED : ஆக 18, 2025 03:10 AM
கொடைக்கானல்: கொடைக்கானலில் அனுமதியின்றி இயந்திர பயன்பாடு தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையை மீறியும் இதன் பயன்பாடு தாரளமாக நடக்கிறது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் மலைத் தள பாதுகாப்பு சட்டப்படி போர்வெல், கம்ப்ரசர், பொக்லைன், பாறை தகர்ப்பு உள்ளிட்டவற்றிற்கு தடை உள்ளது. ஆர்.டி.ஒ., கண்டிப்பை மீறியும் கொடைக்கானலில் இயந்திர பயன்பாடு தாராளமாக நடந்தேறிகின்றன.
வருவாய்த்துறையினர் கண்டு கொள்ளவதே இல்லை. இரு மாதத்திற்கு முன் ஆர்.டி.ஒ., திருநாவுக்கரசு அறிக்கையில், 'கொடைக்கானலில் அனுமதியற்ற இயந்திர பயன்பாடுகள் நடக்கின்றன. ஜூன். 30 க்குள் இத்தகைய கனரக வாகனங்கள் மலைப்பகுதியில் இருந்து தரைப்பகுதிக்கு இறக்க வேண்டும். மீறும் பட்சத்தில் ஜூலை 1 முதல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
உடந்தையாக செயல்படும் வருவாய்த்துறை மற்றும் பிற துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்திருந்தார்.
ஒரு மாதத்தை கடந்த போதும் இயந்திர பயன்பாட்டின் மீது பெயரளவிற்கு போலீசில் புகார் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள வருவாய்த்துறையினர் மீது கலெக்டர் சரவணன் சாட்டையை சுழற்றி நடவடிக்கையை தொடர வேண்டும்.