/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மதுரை டாக்டருக்கு மருத்துவ சேவை விருது
/
மதுரை டாக்டருக்கு மருத்துவ சேவை விருது
ADDED : அக் 09, 2025 04:47 AM

சின்னாளபட்டி : காந்திகிராம அறக்கட்டளையின் 78வது ஆண்டு விழா ,காந்தி ஜெயந்தி விழா, காந்திகிராமம் டாக்டர் சவுந்தரம் மணிமண்டபத்தில் நடந்தது.
திருநெல்வேலி மாவட்டம் சிவசைலம் வாமா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார். காந்திகிராம அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பங்கஜம், செயலாளர் சிபுசங்கரன், பொருளாளர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மேலாளர் மகாலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். சவுபாக்கியா குழந்தைகள் இல்ல தாளாளர் நீலா வரவேற்றார். கலெக்டர் சரவணன் பேசினார். சிறந்த சமூகம் காந்திய பணிக்கான கெய்தான் சத்யா விருது தமிழ்நாடு சர்வோதய மண்டல் பொருளாளர் முருகனுக்கும், சிறந்த மருத்துவ பணிக்கான டாக்டர் ஏ.கே தரி யன் விருது மதுரை ஐஸ்வர்யம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் பாலகுருசாமிக்கு வழங்கப்பட்டது. அறக்கட்டளையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் தமிழ் வழியில் 10, பிளஸ் 2 வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியருக்கு கலெக்டர் சரவணன் கையெழுத்திட்ட புத்தகங்களை வழங்கினார். கடந்தாண்டு பணி ஓய்வு பெற்றவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.