தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மகா பிரத்தியங்கிரா தேவி யாகம்

 மகா பிரத்தியங்கிரா தேவி யாகம்

 மகா பிரத்தியங்கிரா தேவி யாகம்


ADDED : ஏப் 17, 2026 10:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 10:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாணார்பட்டி:மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக மக்களின் நலன் வேண்டி சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு மகா பிரத்தியங்கிரா தேவி யாக பூஜையை சபை நிர்வாகி டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார்.

இதையொட்டி பிரத்தியங்கிரா தேவி அம்மன், நரசிங்க பெருமாள் பூக்களால் அலங்கரிக்க யாககுண்டத்தில் மிளகாய் மூடை மூடையாக கொட்ட வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி பூஜை நடத்தப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். . வெளிநாட்டு பக்தர்கள் இணையதளம் வழியாக பூஜையில் பங்கேற்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை பனை ஓலையில் எழுதிஅதனை அக்னி குண்டத்தில் போட்டு வேண்டிக்கொண்டனர். நாட்டு மாடுகளுக்கு அகத்திக்கீரை அளிக்கப்பட்டு அமாவாசை கோபூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us