தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோயில்களில் மகா சிவராத்திரி

 கோயில்களில் மகா சிவராத்திரி

 கோயில்களில் மகா சிவராத்திரி


ADDED : பிப் 17, 2026 07:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 07:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு திரவிய அபிஷேகங்களுடன் 4 கால பூஜைகள் நடந்தது.

அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன், மூலவர், ஓம்கார விநாயகர், ஓம்கார நந்தி, பாலதண்டாயுதபாணிக்கு திரவிய அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம், தேவார பாராயணத்துடன் மகா தீபாராதனை நடந்தது.

கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சித்தையன்கோட்டை காசி விசுவநாதர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலிலும் மகா சிவராத்திரி அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.

குஜிலியம்பாறை : சின்னழகு நாயக்கனுார் தொப்பையசாமி மலையில் ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள தொப்பைய சாமி திருக்கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா நடந்தது. மலை உச்சியில் 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொப்பையசாமிக்கு சிறப்பு பூஜை , அபிஷேகம். அன்னதானம் நடந்தது.

நிர்வாக அறங்காவலர் தர்மர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us