ADDED : செப் 12, 2026 05:18 AM

சாணார்பட்டி: ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் மகா பிரத்யங்கிரா தேவி யாக பூஜை நடந்தது. உலக மக்களின் நலன் வேண்டி நடந்த பூஜையை சபையின் நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தினார். பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய மிளகாய் வற்றல் யாக குண்டத்தில் கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க பூஜை நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோ பூஜை, பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.
கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் 21 வகை திரவிய அபிஷேகம், மலர்களால் அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. மழை வேண்டி நடந்த சிறப்பு யாக பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சின்னாளபட்டி: சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் மூலவர், உற்சவர் கோதண்டராமருக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. சின்னாளபட்டி லிங்குசாமி மடம், அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், குட்டத்துப்பட்டி பிச்சை சித்தர் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
