ADDED : மார் 08, 2024 01:51 AM
திண்டுக்கல்: மகா சிவராத்திரி முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக மாலை கட்டுவதற்கான பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
திண்டுக்கல் அண்ணா வணிக வளாக பூ மார்க்கெட்டில் சுற்றுப்பகுதிகளான நிலக்கோட்டை, செம்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, வெள்ளோடு, சித்தையன்கோட்டை, மயிலாப்பூர், செங்கட்டாம்பட்டி, போடிகாமன்வாடி உள்ளிட்ட கிராமங்களில் பூக்கள் விளைவிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
இந்தநிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் ரூ. 20க்கு விற்ற சம்பங்கி ரூ250, ரூ. 20க்கு விற்ற அரளி ரூ250, ரூ.40க்கு விற்ற ரோஜா ரூ.130க்கும் விற்பனையாது. செவ்வந்தி ரூ.250, மல்லிகை ரூ. 800, கனகாம்பரம் ரூ.350, முல்லை ரூ.450, வாடாமல்லி ரூ.50 என விற்பனையானது.
