/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மகாவீர் ஜெயந்தி: நுாதனமாக இறைச்சி விற்பனை
/
மகாவீர் ஜெயந்தி: நுாதனமாக இறைச்சி விற்பனை
ADDED : ஏப் 11, 2025 05:31 AM
திண்டுக்கல்: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் போன்கால் மூலம் வியாபாரிகள் நுாதன முறையில் வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று மதுக்கடைகள், பார்கள், இறைச்சி கடைகள் மூட உத்தரவிடப்பட்டது. அதன்படி திண்டுக்கல்லில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஆனால் அதிகாலையிலே கறிக்கடைகள் திறக்கபட்டு கால் கிலோவில் தொடங்கி ஒரு கிலோ வரை வெட்டி தனித்தனி பைகளில் போட்டு வைத்துவிட்டனர். கடைக்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களுக்கு கறி எங்கு கிடைக்கும் என்ற விவரங்களை தெரிவிக்கும் பொருட்டு கடையருகே ஒருவரை நிறுத்தியிருந்தனர்.
அவரிடம் கேட்டுவிட்டு அருகில் உள்ள மளிகை கடை, டீ கடை, பொட்டிக்கடைகளில் கேட்டு கறிகளை வாங்கிக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்திருந்தனர். போன்கால் மூலம் கறி கேட்டால் எந்த கடையில் கிடைக்கும் என்ற தகவல் தெரிவிக்க அங்கு சென்று வாங்கி கொண்டனர். இந்த விற்பனை அனைத்துமே ஜி பே, போன்பே போன்ற செயலிகள் வழியாக பணப்பரிவர்த்தனை நடந்தது.
வழக்கமாக ஒரு கிலோ ரூ.800 க்கு விற்ற நிலையில் நேற்று சர்வீஸ் சார்ஜோடு ரூ.900 க்கு விற்பனை செய்யப்பட்டது.

