ADDED : மார் 26, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகர் சவுராஷ்டிரா சபை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி திதியை முன்னிட்டு சத்ரு சம்ஹார திரிசதி மகாயாகம் நடந்தது. கோயில் அர்ச்சகர் சார்பில் நடந்த இந்த யாகத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
ஹோமம் முடிந்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் , தீபாராதனைகள் நடந்தன பிரசாதம் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் ஹரிகர சுப்பிரமணியன் செய்திருந்தார்.
