தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பராமரிப்பற்ற குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

பராமரிப்பற்ற குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

பராமரிப்பற்ற குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்


UPDATED : ஏப் 28, 2026 03:18 PM

ADDED : ஏப் 28, 2026 02:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 28, 2026 03:18 PM ADDED : ஏப் 28, 2026 02:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பராமரிப்பு இல்லாத நிலையில் பொதுமக்கள் குடிநீர் இன்றி தவிக்கின்றனர்.

கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் கலெக்டர் சேம்பருக்கு செல்லும் படிக்கட்டு அருகே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது.

கலெக்டர் அலுவலகத்திற்கு அலுவலர்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நாள்தோறும் வந்து செல்கின்றனர். விவசாய குறைதீர் கூட்டம் என்றால் 1500 பேர் வருகின்றனர்.

இந்நிலையில் அங்குள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பராமரிப்பு இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் அங்கு வரும் மக்கள் குடிநீர் இன்றி தவிப்பது தொடர்கிறது.

எனவே இந்த குடிநீர் இயந்திரம் மட்டும் இன்றி அலுவலகத்தில் உள்ள அனைத்து குடிநீர் சுத்திகரிப்பு இயந்திர கட்டமைப்புகளை சுத்தப்படுத்தி எப்போதும் குடிநீர் கிடைக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us