/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மயில்களால் சேதமாகும் மக்காச்சோளம்
/
மயில்களால் சேதமாகும் மக்காச்சோளம்
ADDED : ஜன 06, 2026 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி: கன்னிவாடி பகுதிகளில் மயில், கடமான், காட்டுமாடு உள்ளிட்ட வன உயிரினங்கள் அதிக அளவில் உள்ளன. அவ்வப்போது யானைகளும் உலா வருகிறது .
இதில் விளைநிலங்களை தேடி மயில்கள் படையெடுக்க தொடங்கி உள்ளன. சமீபத்திய சாரல் மழையால் விவசாயிகள் பசுந்தீவன உற்பத்தி ,மக்காச்சோள சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். செடிகள் வளர்ந்து பால் பிடிக்கும் பருவத்தில் உள்ள நிலையில் மயில்கள் நடமாட்டம் இங்கு அதிகரித்து வருகிறது. இவை மக்காச்சோள சாகுபடியை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

