sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 விலையும் இல்லை விளைச்சலும் இல்லை விரக்தியில் மக்காச்சோளம் விவசாயிகள்

/

 விலையும் இல்லை விளைச்சலும் இல்லை விரக்தியில் மக்காச்சோளம் விவசாயிகள்

 விலையும் இல்லை விளைச்சலும் இல்லை விரக்தியில் மக்காச்சோளம் விவசாயிகள்

 விலையும் இல்லை விளைச்சலும் இல்லை விரக்தியில் மக்காச்சோளம் விவசாயிகள்


ADDED : பிப் 03, 2026 06:05 AM

Google News

ADDED : பிப் 03, 2026 06:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையம் சுற்றிய பகுதிகளில் மக்காச்சோள பயிர்கள் நீரின்றி விளைச்சல் குறைந்த நிலையில் போதிய விலையும் இல்லாததால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.

ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, மஞ்ச நாயக்கன்பட்டி, கள்ளி மந்தயம்,பொருளூர், அப்பியம்பட்டி நால்ரோடு, தும்மிச்சி பாளையம்,பெருமாள் கவுண்டன் வலசு, பாலப்பன்பட்டி சுற்றிய கிராமப் பகுதிகளில் மானாவாரி நிலங்கள் அதிகம் உள்ளன. மழையை பயன்படுத்தி மக்காச்சோளத்தை விவசாயிகள் பயிரிட்டனர். பயிர்கள் கதிர் விடும் நேரத்தில் போதிய மழையின்றி காய்ந்தன. இதனால் மகசூல் மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டது. கிணறுகளில் நீர்மட்டம் குறைந்ததால் மக்காச் சோளம் பயிரிட்ட கிணற்று பாசன விவசாயிகளுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. தற்போது மக்காச்சோளம் 100 கிலோ ரூ.1800 க்கு விற்பனை ஆகிறது. விளைச்சல் குறைந்த நிலையில் விலையும் குறைவாக இருப்பதால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.

அப்பியம்பட்டி விவசாயி கந்தசாமி கூறியதாவது:போதிய மழையின்றி மக்காச்சோள பயிர்கள் காய்ந்ததால் மகசூல் குறைந்து விட்டது. விளைச்சல் குறைந்த நிலையில் விலையும் குறைந்ததால் மக்காச்சோளம் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் மக்காச்சோளம் விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us