/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மல்லைய சுவாமி பெரிய கும்பிடு விழா
/
மல்லைய சுவாமி பெரிய கும்பிடு விழா
ADDED : ஜூலை 06, 2025 03:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைரோடு: பள்ளபட்டியில் காமுகுல ஒக்கலிகர் (காப்பு) லொத்தனவார் குல ஆதி ஒன்னப்பகவுடர் பிதுர்வழி ஏழு பங்காளிகளின் குலதெய்வமாகிய மல்லையசுவாமி பெரிய கும்பிடு விழா நடந்தது.
இதன் விழா ஜூன் 15ல் பிடி மண் எடுத்து மஞ்சள் துணியில் கட்டி வைத்து காப்பு கட்டுதலுடன் துவங்கியது. குதிரை வாகனத்தில் சுவாமி ஊர்வலம், சம்பந்தக்காரர்கள் அழைப்பு, பாரம்பரிய முறையில் பிறந்த வீட்டு பிள்ளைகள், புகுந்த வீட்டு பெண்கள் விலுவைக்கூடை சுமத்தல், சேவையாட்டம், கலைநிகழ்ச்சிகள் என நான்கு நாட்கள் விழா நடந்தது. திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பங்காளிகள், பக்தர்கள் மல்லைய சுவாமியை வழிபட்டனர்.